CM Stalin Financial Assistance: சிவகாசி காளையார்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த இருவர், காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காளையார் குறிச்சியில் உள்ள சுப்ரீம் பட்டாசு ஆலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மாரியப்பன் மற்றும் முருகன் எனும் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 2 பெண்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிதியுதவி அறிவிப்பு:
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தொடரும் விபத்துகள்:
விருதுநகர் பகுதியில் உள்ள சிவகாசி,சாத்தூர் உள்ளிட்ட இடங்களை சுற்றி ஏராளமான, தனியார் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால், அங்கு வெடி விபத்துகள் நிகழ்வதும், உயிரிழப்புகள் ஏற்படும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இதுதொடர்பாக எவ்வளவு தான் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டாலும் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது
Also Read: நேரில் ஆறுதல்! ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதி!