தமிழ்நாடு  முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மதுரை மாவட்டத்திற்கு 320 கோடியே 58 இலட்சம் மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற திட்டப் பணிகள் திறந்து வைத்தும் மற்றும் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார், 51 கோடியே 77 இலட்சம் மதிப்பில் மருத்துவக் கல்லூரி புதிய கல்வியியல் கூடம், ஊரக வளர்ச்சித்துறை புதிய அலுவலகம் உள்ளிட்ட 10 முடிவுற்ற திட்டங்கள் திறந்து வைத்தார், 49 கோடி 74 இலட்சம் மதிப்பில் பொது நல ஆய்வகம், தோப்பூரில் தொற்று நோய் சிறப்பு மருத்துவமனை உள்ளிட்ட 11 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

 



 

கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட 19 துறைகளின் கீழ் 67,831 பயனாளிகளுக்கு 219 கோடி ருபாய் அளவில் நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்தார், விழாவில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேசுகையில் "மதுரைக்கான கோரிக்கைகள் அனைத்தையும் ஆர்வத்துடன், தெளிவாக முதல்வர் கேட்டறிந்தார், கைவிடப்பட்ட பகுதியாக தென் மாவட்டம் இருந்த நிலை இனி மாறும், மதுரையின் வளர்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என முதல்வர் தெரிவித்து உள்ளார், மதுரையின் புதிய அத்தியாயத்தின் துவக்கமாக முதல்வரின் செயல்பாடுகள் இருக்கும்.

 

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் "அமைச்சர் மூர்த்தி உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார், காய்ச்சல் காரணமாக அமைச்சர் மூர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார், ஜல்லிகட்டு போட்டியை பிரமாண்டமாக நடத்தியவர் அமைச்சர் மூர்த்தி, காளைக்கு எப்படி மூக்கானங்கயிறு தேவையோ அதுபோல அமைச்சர் மூர்த்தியை கயிறு வைத்து கட்டுப்படுத்தி உள்ளோம், மூன்று தலைமுறைகளாக மாநில வளர்ச்சிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டது பி.டி.ஆர் குடும்பம், அமைச்சரவையில் மிக கடினமான துறை நிதித்துறை தான், நிதி நிலைமை மோசமாக இருந்தாலும், தனது மொத்த திறமைகளையும் அளித்த சிறப்பாக செயல்பட்டு வருகிறார் பி.டி.ஆர், எனக்கு அரசியல் களத்தை கற்று கொடுத்தது மதுரை மண், சங்க கால மதுரையை நவீன மதுரையை உருவாக்கியது திமுக ஆட்சி, மதுரைக்கு என அண்ணா துவங்கி கலைஞர் வரை திமுக அரசு பல்வேறு திட்டங்களை அளித்தது திமுக ஆட்சி காலத்தில் தான்.



 

மதுரைக்காக மதுரை நகர வளர்ச்சி குழுமம் உருவாக்கப்பட்டு உள்ளது, மதுரைக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செயல்படுத்த உள்ளோம், மதுரை மாவட்டத்தை தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாற்ற நடவடிக்கை, 500 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி வார்டுகளுக்கு பாதாள சாக்கடை அமைக்கப்படும், மதுரை மத்திய சிறைச்சாலை மாநகராட்சி எல்லைக்கு வெளியே புறநகருக்கு மாற்றப்படும், தற்போதைய சிறைச்சாலை பசுமை பகுதியாக மாற்றப்படும், அலங்காநல்லூரில் 50 கோடி மதிப்பில் மருத்துவ வசதி, ஜல்லிகட்டு தொடர்பான அருங்காட்சியகம் என  பிரமாண்டமான நிரந்தர ஜல்லிகட்டு அரங்கம் கட்டப்படும், வீர வசந்தரயார் மண்டபப் பணிகள் முடிந்து 2 ஆண்டுகளில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும், 50 கோடி மதிப்பில் மொத்த விற்பனை சந்தைகளை புறநகர் பகுதிக்கு மாற்றப்படும், அதிக போக்குவரத்து காணப்படும் இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும், மதுரைக்கு மேலும் ஒரு புதிய சிப்காட் தொழில்ச்சாலை அமைக்கப்படும்" என கூறினார்.