கீழடியில் கடந்த 2014-ம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2 மற்றும் 3 கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல்துறையும், அதனைதொடர்ந்து நடைபெற்ற 4, 5, 6, 7 உள்ளிட்ட அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல்துறையும் மேற்கொண்டனர். கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7-ம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. நடைபெற்று முடிந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டது.
கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கீழடியில் 8-ம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்படும் என கடந்த மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்து கீழடியில் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை நடக்கும் என தெரிவிக்கப்படடிருந்தது. இந்நிலையில் கீழடி 8-ம் கட்ட அகழாய்வுப் பணியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது கீழடியில் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம்” நம்முன்னோர்கள் 2600 ஆண்டுக்கு முன் வாழ்ந்ததர்கான ஆதாரம் கிடைத்துள்ளது. துவக்க காலத்தில் ஒன்றிய அரசு கீழடியில் முதல் மூன்று கட்டங்களை செய்தார்கள். அதற்கு பின் அவர்கள் அதில் நாட்டகம் காட்டவில்லை. ஆனால் எதிர்கட்சியாக இருந்த போதே தற்போதைய முதல்வர் கீழடியை தொடர்ந்து அகழாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் நேரில் வந்து கீழடி அகலாய்வு நடைபெறும் இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதியில் கீழடியைப் போல் தமிழ்நாட்டில் உள்ள தொல்லியல் தலங்களை மீட்டு பாரம்பரியத்தை வெளிக் கொண்டுவருவோம் என உறுதியளித்தார்.
அதன் அடிப்படையில் அகழாய்வு தலங்களில் பணிகளை விரைவுபடுத்தினார். தற்போது 8-ம் கட்ட அகழாய்வை துவக்கியுள்ளோம். கடந்த காலங்களில் தொல்லியல் துறைக்கு 2 கோடி அளவில் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 5 கோடியாக அறிவித்துள்ளார். இன்னும் இதில் தொகையை அதிப்படுத்த வேண்டும் என எண்ணம் உள்ளது. தேவைக்கு ஏற்ப தொல்லியல் துறைக்கு பணம் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழர்களின் நாகரீகம் இன்று, நேற்று அல்ல 2000 ஆண்டுகளுக்கு முன்பே நகர வாழ்க்கை, எழுத்தறிவு, படிப்பறிவு, ஆடை ஆபரணங்கள் ஆயுதங்கள் தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்கள் என்பதற்கான சான்றாக கீழடி அமைந்துள்ளது. கீழடியின் பெருமை வெளிக்கொண்டுவரும் வகையில் தமிழ்நாடு முதல்வர் செயல்பட்டுவருகிறார். விரைவாக கீழடி அருங்காட்சியாக பணிகள் நிறைவடைந்து திறப்புவிழா நடைபெறும்” என்றார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Tamil news | தூத்தூக்குடியில் பிடிபட்ட ரேஷன் பொருட்கள்... மதுரையில் புதிய ரக கத்தரி - தென் மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்