தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது.


தமிழ்நாட்டில் கடந்த மாதம் கொரோனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக, அதனை தடுக்கும் வகையில் பகுதி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. வரும் 7ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கால் கொரோனா சில மாவட்டங்களில் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது.


இந்நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் 7ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச்செயலகத்தில் காலை 11.30 மணிக்கு தொடங்கும் ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர், காவல் துறை டிஜிபி மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.


இந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது தளர்வுகள் வழங்கி தொடர்வதா? என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. ஊரடங்கை நீட்டித்து கொரோனா குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்க வாய்ப்புள்ளதாகவும், கொரோனா அதிகம் உள்ள கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் முதல்வர் ஸ்டாலின் அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தமிழகத்தில் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு


 


முழு ஊரடங்கு காலத்தில் சில செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி


* மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள்


* பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம்


* பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்


* உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. Swiggy, Zomato போன்ற மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்


* பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்


* ஏ.டி.எம். மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.


* வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்


* தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


* மின்னணு சேவை (E-commerce) காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம்.


தமிழகத்திலேயே தடுப்பூசி தயாரிப்பது குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தினருடன் முதல்வர் ஆலோசனை