சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள கொரோனா வார் ரூமில் நேற்றிரவு 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அதன்படி, டீ கடைகள் மூடல், மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 10 வரை திறக்க அனுமதி என்று பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். மேலும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள கொரோனா வார் ரூமில் நேற்றிரவு 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.  பொதுமக்களிடம் இருந்து வந்த அழைப்புகளை ஏற்று அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனே நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில் படுக்கைகள் - மருந்து கையிருப்பு - உயிர்வளி ஆகிய அனைத்தையும் கண்காணித்து ஒழுங்கு செய்யும் கொரோனா கட்டளை மையத்தை (War Room) பார்வையிட்டேன். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலில் தமிழகத்தில் நிலவி வந்த
குழப்பங்களை சீராக்கி திறனுடன் கையாளும் பாதையில் வெகு விரைவாக பயணிக்கிறோம்’ எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் படுக்கைகள் - மருந்து கையிருப்பு - உயிர்வளி ஆகிய அனைத்தையும் கண்காணித்து ஒழுங்கு செய்யும் கொரோனா கட்டளை மையத்தை (War Room) பார்வையிட்டேன்.#Covid19 கட்டுப்படுத்தலில் தமிழகத்தில் நிலவி வந்த
குழப்பங்களை சீராக்கி திறனுடன் கையாளும் பாதையில் வெகு விரைவாக பயணிக்கிறோம். pic.twitter.com/0O2URuDTiv
— M.K.Stalin (@mkstalin) May 14, 2021

ஆய்வின்போது முதல்வரின் செயலாளர்கள் உதயசந்திரன், உமாநாத், தேசிய மக்கள் நல்வாழ்வுத் திட்ட இயக்குநர் தாரேஸ் ஆகியோர் உடனிருந்தனர்.