சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 


வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக நேற்று அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், சிகிச்சை முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்.டிஸ்சார்ஜூக்கு பின் மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளித்ததாக வெளியான தகவலில், “


முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று மாலை உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது ரத்த அழுத்தம், சக்கரை, என்டாஸ்கோஃபி, இரைப்பை சார்ந்த பரிசோதனைகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டது எனவும், அனைத்து பரிசோதனைகளும் நலமுடன் இருப்பதாக முடிவுகளே வந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாதாந்திர பரிசோதனையாக இருப்பதால் இரவு தங்கி முழு பரிசோதனைகளையும் செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் ஒரு சில தினங்கள் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மருத்துவமனையில் அனுமதி:


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று மாலை திடீரென அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தி வெளியானதும் திமுக நிர்வாகிகள் என்னவென்று தெரியாமல் பதட்டத்தில் இருந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன ஆனது என்று தொடர்ந்து கேள்விகள் எழுந்தநிலையில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலம் விளக்கம் அளித்தது. அதில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமான உடல் பரிசோதனைக்காக (Routine Health Checkup) அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைகள் மற்றும் தேவையான சிகிச்சைகள் முடிந்து செவ்வாயன்று (இன்று) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.


என்ன ஆனது முதலமைச்சருக்கு?


தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளில் சுற்றுப்பயணம், வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க பல்வேறு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு சுற்றுப்பயணம் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக, அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு, வயதின் அடிப்படையில் வழக்கமான சில பரிசோதனைகளை செய்வற்காக தான், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.