மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த இருவர் வெள்ளிப்பதக்கமும், இருவர் வெண்கலப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
மலேசியாவில் நடந்த கராத்தே போட்டி
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஜூன் மாதம் 23 முதல் 25 ஆம் தேதி வரை 3 நாட்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றன. ஸ்ரீலங்கா, இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா உள்பட 15 நாடுகளை சேர்ந்த 1500 கராத்தே வீரர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த வி.முகில்பிரசாத்(14) குமித்தே பிரிவிலும், எஸ்.திவாகர்(14) கட்டா பிரிவிலும் 14 முதல் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர். உ.கவின் (12), எஸ்.உமேஷ்(12), ஆகிய இருவரும் குமித்தே பிரிவில் 12 முதல் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் வெண்கலம் வென்றுள்ளனர்.
காஞ்சிபுரம் கனகசுப்புராயன் தெருவில் உள்ள பிரபல தனியார் கராத்தே அகாதெமி மாணவர்களான, இவர்கள் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 22 வது தேசிய அளவிலான ஓப்பன் கராத்தே சேம்பியன்ஷிப் போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளனர். இத்தகவலை கராத்தே தலைமை பயிற்சியாளர் ஆர்.கே.பிரகாஷ் மற்றும் பயிற்சியாளர் எம்.மணிகண்டன் ஆகியோர் தெரிவித்தனர்.
தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வது அவசியம்
இதுகுறித்து பிரகாஷ் நம்மிடம் தெரிவிக்கையில், கடந்தாண்டு நடைபெற்ற இந்த போட்டியில் மாணவர்கள் சென்று பல்வேறு பதக்கங்களை வென்று வந்தனர். அதே போன்று இந்த ஆண்டும் சென்ற மாணவர்கள் பதக்கங்களை வென்று வந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இன்றைய தலைமுறையினரும் அதிகமாக செல்பேசி பயன்படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது. இது போன்ற தற்காப்பு கலைகளை அவர்கள் கற்கும் பொழுது, அதற்காக பயிற்சி எடுக்கப்படும் நேரங்களில் ஆவது அவர்கள் அதிலிருந்து விலகி இருக்க முடியும். இதுபோன்ற தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டால் உடல் வலிமை மற்றும் மன வலிமை ஏற்படும். எனவே மாணவர்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க பெற்றோர்கள் முன் வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்