தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் முழு நலம் பெற வேண்டும். அவர் முதலமைச்சர் பதவி ஏற்றதிலிருந்து ஒரு நாள் கூட ஓய்வு எடுக்கவில்லை. சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். வாரத்தில் ஒரு நாளாவது அவர் ஓய்வு எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். தமிழ்நாட்டு நன்மைக்காக, இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அவர் முழு உடல் நலனோடு பணியாற்றுவது காலத்தின் தேவையாகும்.


அவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஓய்வு எடுக்கிறார். அவருடைய உடல்நலத்தை மனதில் கருதி, திராவிட முன்னேற்றக் கழக முன்னோடிகள், மாவட்டச் செயலாளர்கள் அவரது உழைப்பை நாட்டுக்காகப் பயன்படுத்தும் வேளையில் ஓய்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை மறந்துவிடக் கூடாது. அவர் விரைவில் முழு நலம் பெற்று தமிழகத்திற்கு பணியாற்ற இயற்கையை வேண்டுகிறேன் என தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.






 


முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில்  நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து இருந்தார். மேலும்  அதில் குறிப்பிட்டுள்ளதாவது, இன்று உடற்சோர்வு சற்று இருந்தது, அதை தொடர்ந்து  பரிசோதித்ததில் கொரோனா தொற்று #COVID19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.




 


மேலும், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


கடந்த சில நாட்களாக, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Gotapaya In Maldives : மாலத்தீவுக்கு தப்பிச்செல்ல கோட்டபயவுக்கு இந்தியாவிலிருந்து உதவி சென்றதா? முக்கிய 5 விஷயங்கள் இதோ..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண