கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயம் உள்ளது. இந்த கோயிலில் கடந்தாண்டு தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீட்சிதர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.


இருவிரல் பரிசோதனை:


இந்த சூழலில், சிதம்பரத்தில் குழந்தை திருமணம் நடைபெறவில்லை என்றும், பொய் குற்றச்சாட்டில் தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தனர். மேலும், திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் ஆளுநர் குற்றம் சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த புதன்கிழமை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் சிதம்பரத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தீட்சிதர்கள், திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட தீட்சிதர் குழந்தைகள், சிதம்பரம் மகளிர் காவல் நிலையம், மருத்துவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆணைய உறுப்பினர், தீட்சிதர்கள் குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொட்டது உண்மை என்றும், இருவிரல் பரிசோதனை நடத்தப்படவில்லை என்றும் கூறினார்.


குழந்தை திருமண புகைப்படம்:


ஆனால், அடுத்த 2 நாட்களில் சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்டது உண்மை என்று கூறியிருந்தார். ஆணைய உறுப்பினர் மாறி, மாறி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சிதம்பரத்தில் குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படங்களில் சிறுவர், சிறுமி இருவரும் மணக்கோலத்தில் மாலையுடன் அமர்ந்திருப்பது போலவும், சிறுமி ஒருவர் மணப்பெண் கோலத்தில் வருவதும் மிக தெளிவாக உள்ளது.


தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை பதிவிட்டு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டது தொடர்பாக தேசிய ஆணைய உறுப்பினர் மாற்றி, மாற்றி பேசியதற்கே பலரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அவர் மாற்றி மாற்றி கூறியதன் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இந்த நிலையில், மணக்கோலத்தில் சிறுவர்கள் இருக்கும் புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.


மேலும் படிக்க: TN Rain Alert: ஒரே நாளில் 12 செ.மீ. மழை.. தத்தளித்த நாமக்கல்...! இன்றும் வெளுத்து வாங்கப்போகிறதா...? முழு நிலவரம்..!


மேலும் படிக்க: இணையருடன் பாலியல் உறவு கொள்ளாமல் இருப்பது சரியா ? தவறா? - அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து..!