வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, கடந்த சில தினங்களாக மழை  பெய்து வருகிறது. இன்று 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாமக்கல்லில் 12 செ.மீ. மழை பெய்ததால் அங்கு சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. 


27.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.  


28.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


29.05.2023 மற்றும் 30.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): நாமக்கல் கலெக்டர் அலுவலகம் 12 செ.மீ, பொதுப்பணி துறை டிராவலர்ஸ் பங்களா (சிவகங்கை மாவட்டம்), கொடநாடு (நீலகிரி மாவட்டம்) தலா 8, தஞ்சாவூர் பிடோ (தஞ்சாவூர் மாவட்டம்), பெருந்துறை (ஈரோடு மாவட்டம்), பாலவிதிதி (கரூர் மாவட்டம்) தலா 6 செ.மீ,கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), திருப்பத்தூர் (சிவகங்கை), திருமயம் (புதுக்கோட்டை), புதுச்சத்திரம் (நாமக்கல்), சேந்தமங்கலம் (நாமக்கல்), பாண்டவையர் தலைவர் (திருவாரூர்), கோத்தகிரி (நீலகிரி), மிமிசல் (புதுக்கோட்டை), (தஞ்சாவூர்), விராலிமலை (புதுக்கோட்டை) தலா 5, 


அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), ஹாரூர் (தருமபுரி), மதுக்கூர் (தஞ்சாவூர்), கடவூர் (கரூர்), காரைக்குடி (சிவகங்கை), ராசிபுரம் (நாமக்கல்), அதிராம்பட்டினம் AWS (தஞ்சாவூர்), காரையூர் (புதுக்கோட்டை) தலா 4,  தஞ்சாவூர், மணப்பாறை (திருச்சி), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி), கீரனூர் (புதுக்கோட்டை), ஆலங்குடி (புதுக்கோட்டை), கீழ அணைக்கட்டு (தஞ்சாவூர் மாவட்டம்), சேலம் (சேலம்), கொடுமுடி (ஈரோடு), வத்தளை அணைக்கட் (திருச்சி), முசிறி (திருச்சி), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), குளித்தலை (கரூர்), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), தம்மம்பட்டி (சேலம்), எருமப்பட்டி (நாமக்கல்) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.   அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.


தென் தமிழ்நாட்டில் மழை பதிவாகி வரும் நிலையில் வேலூர், மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 40 டிகிர் செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.