சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் -இந்து சமய அறநிலையத்துறை இடையே கருத்து வேற்றுமை இருப்பது அனைவரும் அறிந்ததே. கோயில் நிர்வாகப் பணிகளை அறநிலையத்துறை மேற்கொள்ள தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில்(Chidambaram Temple Row) இன்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கோயில் வளாகம் வந்து அவர்களை தீட்சிதர்கள் வரவேற்றனர். அதன் பின், கோயில் சொத்து தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப் போவதாக அறநிலையத்துறை ஆய்வு குழு தெரிவித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள், அதை ஆய்வு செய்ய உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு? உங்களுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. நடராஜர் கோயில் நிலங்கள் தொடர்பாக தனி வட்டாட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தான், அனைத்து சொத்துகளையும் பாதுகாத்து வருகிறார். அவரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள். எங்களிடம் எதுவும் கேட்க வேண்டாம் எனக் கூறிவிட்டனர்.
மேலும் இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால், வரவு செலவு கணக்குகளை நீதிமன்றம் மூலம் தருகிறோம். நேரடியாக எதுவும் தர முடியாது என மறுத்துவிட்டனர்.
தீட்சிதர்களின் சார்பில் அவரது வழக்கறிஞர் சந்திரசேகர் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் பேசினார். அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் அனைத்து வரவு செலவு கணக்குகளும் சரியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றம் கோயில் நிர்வாகம் குறித்து தெளிவாக தீர்ப்பு அளித்துள்ளது ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்து சமய அறநிலைத்துறை குழு ஆய்வுக்கு வந்துள்ளதால் ஒத்துழைப்பு அளிக்க முடியாது. சட்டப்படி அமைக்கப்பட்ட குழு வந்தால் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து கோயிலை விட்டு வெளியே வந்த அதிகாரிகள் குழு கோயில் வளாகத்தில் நின்றபடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கோயில் தொர்பான சொத்து விபரங்களை ஆய்வு செய்ய முடியாமல், கோயில் வளாகத்தில் அதிகாரிகள் காத்திருந்தனர். ஆய்வுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க மறுத்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவிருப்பதாக கூறிப்படுகிறது. இதனால் கோயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அது தொடர்பான வீடியோக்கள் கீழே:
Chidambaram Natarajar Temple LIVE | ஆய்வுக்கு வந்த அதிகாரிகள்.. செக் வைக்கும் தீட்சிதர்கள்!
தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞரின் பேட்டி இதோ:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்