சென்னை அருகேயுள்ள செங்கல்பட்டு மாவட்டம் வடநெம்மேலு பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிலி.  காவலரான இவர், தாம்பரம் கானத்தூர் காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை மத்திய கைலாஸ் பகுதி அருகேயுள்ள தனியார் மருத்துவமனை வாசலில் நின்றுள்ளார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.


ரவிக்குமார் தாய்..


தாம்பரம் உதவி கமிஷ்னர் ரவிக்குமாரின் தாய் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மத்திய கைலாஷ் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவமனையில் பார்த்துக்கொள்ள வேண்டி வாய்மொழி உத்தரவின் பேரில் ஷர்மிலா பணியாற்றியுள்ளார். பின்னர் தனது ஷிப்ட்டை முடித்துவிட்டு மப்டி உடையில் அடுத்த ஷிப்ட் வேலைக்கு ஆயுதப்படை காவலர் சரவணனுக்காக  நேற்று இரவு மருத்துவமனை வாசலில் காத்துக்கொண்டு நின்றுள்ளார ஷர்மிளா.


அவரைக் கண்ட இளைஞர் ஒருவர் ‘ஏம்மா..வரியா.. உன்னைத்தான்’’ என அழைத்துள்ளார். எதிர்பாராத நபரின் எதிப்பாராத அணுகுமுறையால் மருத்துவமனைக்குள் சென்றுள்ளார் ஷர்மிளா. மீண்டும் வாசலுக்கு வந்துள்ளார். அங்கே இருந்த அதே நபர் மீண்டும் மீண்டும் ‘வரியா.. வரியா என ஆபாசமாக பேசியுள்ளார். தொடர் தொல்லையால் பொறுமையிழந்த காவலர், யாரிடம் எப்படி பேசுவதென தெரியாதா? எல்லாரிடமும் இப்படித்தான் பேசுவியா என கோபமடைந்துள்ளார். சரியாக அந்த நேரத்தில் அடுத்த ஷுப்டுக்கான காவலர் வரவே இந்த விவகாரம் பூதாகரமானது.




மன்னிப்பு..


என்ன நடந்தது என கேட்டு தெரிந்துகொண்ட காவலர்  சரவணன் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் சைகை மூலம்பெண்ணிடம் ஆபாசமாக பேசியதற்கு  மன்னிப்பு கேட்குப்படி கூறியுள்ளார். அதற்கும் விடாப்பிடியாக மறுப்பு தெரிவித்த அந்த இளைஞர் நான் அப்படித்தான் அழைப்பேன் எனக் கூறி தன் நண்பர்களுக்கும் போன் செய்துள்ளார். அங்கு வந்த இருவரும், அந்த இளைஞரும் சேர்ந்து காவலரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.


இதனால் பொறுமை இழந்த காவலர் அந்த இளைஞர் வந்த பைக் சாவியையும், செல்போனையும் பிடிங்கி மத்திய கைலாஷ் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.  பின்னர் இது குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கலிக்குன்றத்தை சேர்ந்த விக்னேஷ் (29) என்ற நபரிடம் விசாரணை செய்தனர். குற்றத்தை விக்னேஷ் ஒப்புக்கொண்ட நிலையில் அவர் மீது  பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது நண்பர் குணசேகரனும் கைது செய்யப்பட்டார். பெண் போலீசாருக்கே பாலியல் தொல்லைக் கொடுக்கும் விதமாக சைகை காட்டிய சம்பவம் மத்திய கைலாஷ் பகுதியில் பரபரப்பை உண்டாக்கியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண