"சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று முதல், சென்னையிலிருந்து கேரளாவின் பம்பை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது"

Continues below advertisement

தொடங்கியது சபரிமலை சீசன் - Sabarimalai 

கேரளா என்றாலே தமிழ்நாட்டில் பலருக்கு நினைவுக்கு வருவது சபரிமலை ஐயப்பன் கோவில் தான். ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்படும்போது, தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது. 

பல நாட்கள் மாலை அணிந்து விரதம் இருந்து, சபரிமலைக்கு இருமுடி கட்டி 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் குழுவாக இணைந்து, பேருந்து அல்லது வேன் மூலம் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

Continues below advertisement

அதேபோன்று சமீப காலமாக தனியாக பேருந்து மூலமாகவோ அல்லது ரயில் மூலமாகவோ சபரிமலை செல்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையிலிருந்து சபரிமலைக்கு செல்பவர்களுக்கு தமிழக போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. 

சென்னையில் இருந்து பம்பை வரை..

தனி வாகனம் அல்லது கார் போன்ற வாகனங்களில் சபரிமலைக்கு சென்றால், நிலக்கல் என்ற பகுதியில் பேருந்துகள் அல்லது கார்களின் நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்து மூலம் பம்பை செல்ல வேண்டும். பம்பையில் குளித்து நீராடிவிட்ட பிறகு, சிறிய பாதை மூலம் சபரிமலை யாத்திரை பயணம் மேற்கொள்வதை பெரும்பாலான பக்தர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் தமிழக போக்குவரத்து துறை நேரடியாக பம்பை வரை பேருந்துகளை இயக்கி வருகிறது. 

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று முதல், சென்னையிலிருந்து கேரளாவின் பம்பாய் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்தாண்டும் இந்த பேருந்துகள் இயக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். அந்த வகையில் இந்த ஆண்டு பேருந்துகளுக்கும் பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. 

பேருந்துகளில் நேரம் என்ன ? Chennai To sabarimala Direct Bus Details 

சென்னையில் பொறுத்தவரை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய இரண்டு பேருந்து நிலையங்களில் இருந்து 5 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோயம்பேடு பொருத்தவரை மதியம் 2 மணி, மதியம் இரண்டு முப்பது மணி மற்றும் 3 மணி ஆகிய நேரங்களில் தினமும் 3 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

மதியம் 2 மணிக்கு கோயம்பேட்டில் இருந்து செல்லும் பேருந்து மறுநாள் காலை 6 மணிக்கு, இரண்டு முப்பது மணிக்கு செல்லும் பேருந்துகள் மறுநாள் காலை 6:30 மணிக்கு, மூன்று மணிக்கு இயக்கப்படும் பேருந்து மறுநாள் 7 மணிக்கு பம்பை பகுதிக்கு செல்லும். 

இதேபோன்று சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மதியம் 2:30 மணிக்கு இயக்கப்படும் பேருந்து, மறுநாள் காலை 6:30 மணிக்கு பம்பை சென்று அடையும். அதேபோன்று மதியம் மூன்று மணிக்கு இயக்கப்படும் பேருந்து மறுநாள் காலை 7 மணிக்கு பம்பை சென்றடையும். கிளாம்பாக்கத்தில் இருந்து தினமும் 2 பேருந்துகள் இயக்கப்படுகின்றன (பேருந்துகளின் நேரம் இணையதளத்தில் சரி பார்த்துக் கொள்ளவும்). இந்த பேருந்துகள் திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் மற்றும் குமுளி வழியாக சபரிமலைக்கு தற்போது இயக்கப்படுகிறது.

பேருந்து கட்டண விவரம் என்ன ? Chennai To Sabarimala Bus ticket Price 

சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துக்கு இருக்கு கட்டணம் 1215 ரூபாயும், ஸ்லீப்பர் கட்டணம் 1565 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகளுக்கு இருக்க கட்டணம் 1265 ரூபாயும், ஸ்லீப்பர் கட்டணம் 1630 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

முன்பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்? Sabarimala Bus Online Booking 

இச்சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, tnstc.in என்ற இணையதளத்திலும் மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலி மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு 9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை பக்தர்கள் வரவேற்பு 

இவ்வாறு அரசு பேருந்து மூலம் நேரடியாக பம்பை வரை செல்வதால், சென்னை மற்றும் சென்னை சுற்றுவட்டார சபரிமலை பக்தர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. வருங்காலங்களில் இது போன்று கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.