Today Weather Forecast Today (17-11-2025): "காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழ எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது."

Continues below advertisement

புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழ்நாட்டின் நோக்கி நகர உள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கு "ஆரஞ்ச் அலெர்ட்" எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை என்ன ?

இலங்கை கடலோர பகுதிக்கு அப்பால், தென்மேற்கு வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடித்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தமிழ்நாட்டின் நோக்கி நகரும்.

Continues below advertisement

இதனால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த மழை நாளையும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்? Today Weather Forecast Orange Alert 

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் உஷாராக இருக்கும்படியும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் நெய்வேலி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் இன்றைய வானிலை நிலவரம் என்ன ? Kanchipuram Weather Forecast Today 

காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் மாநகரம், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் பகுதியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று காலை மற்றும் மாலை பகுதிகளில் அதிக அளவு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் இன்றைய நிலவரம்? Chengalpattu Weather Forecast Today 

செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை சென்னை விமான நிலையம் மீனம்பாக்கம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு, திருப்போரூர், சோழிங்கநல்லூர், செய்யூர் மற்றும் மதுராந்தகம் பகுதியில் இன்று மாலை நேரங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.