சென்னையில் ஆழ்வார்திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று 2ஆம் வகுப்பு மாணவர் தீக்ஷித் வேன் மோதி விபத்தில் உயிரிழந்தார். அந்த விபத்து பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக விளக்கம் அளிக்க ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் அந்தப் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை விடுத்துள்ளார். அதில், “ சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளின் தாளாளர்கள்/ முதல்வர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அழைத்து வருவதற்கு பள்ளி பேருந்து வாகன ஏற்பாடு செய்யப்பட்டு செயல்படுத்தி வரும் பள்ளித் தாளாளர்கள் முதல்வர்கள் பராமரிப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இந்த கீழ்கண்ட அறிவுரைகளை பின்பற்றி வாகனங்களில் முறையாக செயல்படுத்திட அறிவுறுத்தப்படுகிறது.
அதன்படி
பள்ளி பேருந்து வாகனங்கள் முறையாக பராமரித்து ஆண்டு தோறும் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தி வாகனங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு புதுப்பிக்க படாத பள்ளிபெருத்துகளை இயக்குதல் கூடாது.
ஓட்டுநர்கள் நியமனம் செய்யப்படும்போது உரிய கல்வித் தகுதி மற்றும் முறையாக பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள நபர்களை நியமிக்க வேண்டும்.
பள்ளி பேருந்து வாகனத்தில் மாணவர்களை இருப்பிடத்திலிருந்து அழைத்து வரும்போது பெருந்தில் உதவியாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டு மாணவர்களை பாதுகாப்பாக வாகனத்திலிருந்து இறக்கி பள்ளி வளாகத்தினுள்ளே அனுப்பப்பட வேண்டும். மேலும் மாணவர்கள் பள்ளி பேருத்திலிருந்து இறங்கியபின் பேருத்தின் அருகாமையில் நான்புறமும் மாணவர்கள் எவருமில்லை என்பதை உறுதி செய்து கொண்டு மீண்டும் வாகனத்தை இயக்க வேண்டும்.
மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து திரும்ப அழைத்துச் சென்றுவிட பயன்படுத்தப்படும். பள்ளிப் பேருந்துகள், வேன்கள். ஆட்டோ ரிக் ஷாக்களில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து திரும்ப அழைத்துச் சென்றுவிட பயன்படுத்தப்படும் பள்ளிப் பேருந்துகள், வேன்கள், ஆட்டோ ரிக் ஷாக்களில் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை பள்ளித்தாளாளர்/முதல்வர் உறுதி செய்யப்படவேண்டும். அவற்றில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்