திருவள்ளூர் மாவட்டம், செஞ்சிபானம்பாக்கத்தில் அமைந்துள்ள  பழமையான ஜனமே ஜெய மதீஸ்வரமுடைய மஹாதேவர் எனும் சிவன் கோயில்  மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்த நிலையினைக் கண்டு, காஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டுக்கொண்டு இருக்கும், தொண்டை மண்டல உழவாரக் குழுவினர் இத்திருக்கோவிலினை உழவாரப்பணி செய்து,  சீர்படுத்த நினைத்து முதற் கட்டமாக, கோயிலின்  மண்டபம், விமானத்தின் மேல் வளர்ந்து இருந்த செடி, கொடிகள், சிறு மரங்களை அப்புறப்படுத்தியதோடு,  கோயிலின் முன் இருந்த குப்பைகளையும் அகற்றி சுத்தம் செய்தனர். 




இத்திருக்கோவிலில்  விக்கிரமசோழன், மூன்றாம் குலோத்துங்கன், மற்றும், மூன்றாம் ராஜராஜன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுகள் தாங்கிய சிறப்புடையது. விக்ரம சோழன் கல்வெட்டு இருப்பது மூலம் இக்கோயில் சுமார் 850 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாகும். இக்கோவிலினை உழவார பணி செய்ய ஆரம்பித்த போது செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குனர்  த.கோ.விசயராகவன் மற்றும் உலகத்  தமிழாராய்ச்சி மையத்தின் மேனாள் இயக்குனர் கா.மு.சேகர் நேரில் வந்து, இக்கோவிலின் நிலை குறித்த  விவரங்களை கேட்டறிந்தனர். அப்பணியில் பங்கேற்ற அனைவருக்கும் காலை, மற்றும் மதிய உணவு, குடிநீர் மற்றும், அனைத்து தேவைகளையும் செஞ்சி ஊராட்சித்தலைவர் ராஜிடம் கூறிச்செய்து கொடுத்தனர். ஐம்பதுக்கும், மேற்பட்ட தன்னார்வலர்களுடன் நடத்தப்பட்ட இந்த உழவாரப்பணியினை தொண்டை மண்டல உழவாரக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் பாபுமனோ மற்றும் ரூத் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.




இதுகுறித்து காஞ்சிபுரத்தை சேர்ந்த பாபு மனோ நம்மிடம் கூறுகையில், ஜனமே ஜய மதீஸ்வரமுடையார் கோயில் உழவாரப்பணியினில், காஞ்சிபுரம், ஏனாத்தூரில் உள்ள  சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், தமிழகத்தில்  உள்ள கலாச்சார அடையாளங்களான கோயில்களை காக்கும் பொருட்டு , இறைக்கு செய்யும் நற்பணியில்  நாங்களும் உடன் இருப்போம் என்று கூறியதோடு தமிழ் துறை தலைவர் இராதாகிருஷ்ணன்,இயற்பியல் துறை தலைவர் பாலச்சந்தர் மற்றும் மேற்படி கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களுடன் தங்களின் கல்லூரி வாகனத்திலேயே அனைவரையும், அழைத்து வந்ததோடு,  நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களுடன் இணைந்து தானும் கலந்து கொண்டு உழவாரப்பணியினை மேலும் சிறப்பாக்கினார்கள். நமது தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரம், மற்றும், வரலாற்று தேடலில், இன்றைய சமூகம், ஒரு தேடலில், இறங்கிப் பயணித்துக் கொண்டிருக்கும், நிலையில், கல்லூரி மாணவர்களுடன், இணைந்து, உழவாரப்பணி போன்ற,  செயல்களைச் செய்யும், போது, அதனை மேலும், ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண