புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தின் ஐந்தாவது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுகுணா சிங் ஐபிஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.  ஏற்கெனவே காவல் கண்காணிப்பாளராக இருந்த அரவிந்தன் பணியிடமாற்றப்பட்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த சுகுணா சிங் தற்போது புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


3 ஆண்டுகளில் 5 எஸ்பிக்கள் 


செங்கல்பட்டு புதிய மாவட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் இதுவரை 4 காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளராக கண்ணன் நியமிக்கப்பட்டர். பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் கண்ணன் பெயரும் சிக்கியதால் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பணியிடமாற்றம் செய்யப்பட்டு பின்னர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். பின்னர் சுந்தரவதனம் எஸ்.பியாக நியமிக்கப்பட்ட நிலையில் பொறுப்பேற்ற 3 மாதத்தில் சென்னை மாதவரம் துணை ஆணையராக மாற்றப்பட்டார். இதை தொடந்து திருப்பத்தூர் எஸ்.பியாக இருந்த பி.விஜயக்குமார் கடந்த ஜூன் மாதம் எஸ்.பியாக நியமிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த டிசம்பர் மாதம் பணியிடமாற்றப்பட்டு பி.அரவிந்தன் நியமிக்கப்பட்டார். தற்போது இவரும் மாற்றப்பட்டு ஜி.சுகுணா சிங் 5-ஆவது காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.  அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டு, ஏஎஸ்பி ஆதா்ஸ் பச்சேரா, தனிப்பிரிவு ஆய்வாளா் அலெக்ஸாண்டா் உள்ளிட்ட ஆய்வாளா்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது ஐஜி மதிப்பில் உள்ள அதிகாரிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய வணக்கத்தை எஸ்.பி சுகுணா சிங்கு அளித்தனர்.




எஸ்.பிக்கு அளிக்க வேண்டிய மரியாதையை தந்தால் போதும்


காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொண்டு பேசிய எஸ்.பி. சுகுணா சிங், காவல் கண்காணிப்பாளருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை எனக்கு அளிக்காமல், ஐஜிக்கு அளிக்க வேண்டிய மரியாதையை அளித்துள்ளீர்கள். காவல் கண்காணிப்பாளருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை மட்டும் தந்தால் போதும் என பேசினார். 






காஞ்சிபுரம் சரக டிஐஜி தர வேண்டிய மரியாதை மற்றும் அதற்கு மேல் அதிகாரியாக உள்ள ஐஜி ஆகியோருக்கு அளிக்க வேண்டிய மரியாதை அளித்ததால், அதனை மாற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். வழக்கமாக இருக்கும் நடைமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். இனி சரியானது எதுவோ அதை செய்ய வேண்டும் என காவலர்களுக்கு அறிவுரை கூறினார். பொறுப்பேற்ற முதல் நாளே காவலர்களுக்கு சரியான ஒன்றை செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டது காவலர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. 


மேலும் படிக்க:ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் திரும்பி பார்க்க வைத்த அல்லூரி சீதாராமராஜூ - யார் இவர்?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண