சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஏழு மண்டலங்களில் சென்னை சங்கமம் மற்றும் நம்ம ஊரு திருவிழா நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
ஜனவரி மாதம் 13ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரை சென்னையில் சென்னை சங்கமம் மற்றும் நம்ம ஊரு திருவிழா ஆகியவை இணைந்து கொண்டாடப்படவுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். மேலும், இந்த திருவிழா கொண்டாட்டமானது பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெறவுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இந்த நிகழவை 13ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார் என அறிவித்துள்ளனர்.