வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையின் பல பகுதிகளிலும் மழைநீர் கடுமையாக சாலைகளில் தேங்கியுள்ளது.
7 ரயில்கள் ரத்து:
சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் ரயில் தண்டவாளங்களிலும் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து போடிநாயக்கனூர் செல்லும் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டுமின்றி நாளையும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவற்றின் விவரத்தை கீழே விரிவாக காணலாம்.
- எம்.ஜி.ஆர். சென்ட்ரல் – போடிநாயக்கனூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ( வண்டி எண் 20601) நாளை இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
- ஜோலார்பேட்டை – எம்.ஜி.ஆர். சென்ட்ரல் வரை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ( வண்டி எண் 16090) நாளை மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
- சென்ட்ரல் ரயில் நிலையம் – ஜோலார்பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ( வண்டி எண் 16089) நாளை மாலை 5.55 மணிக்கு புறப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
- நாளை மாலை 6.25 மணிக்கு திருப்பதியில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் ரயில் ( வண்டி எண் 16204) ரத்து செய்யப்படுகிறது.
- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாளை மாலை 4.35 மணிக்கு திருப்பதி செல்லும் ரயில் ( வண்டி எண் 16057) ரத்து செய்யப்படுகிறது.
- ஈரோட்டில் இருந்து நாளை இரவு 9 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ஏற்காடு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ( வண்டி எண் 22650) நாளை ரத்து செய்யப்படுகிறது.
- திருப்பதயிில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நாளை மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
வியாசர்பாடி பேசின் பிரிட்ஜ் அருகே உள்ள தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால் ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.