சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த 30 நிமிடங்களாக பெய்து வரும் மழையால் சில இடங்களில் வெள்ளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது. திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி. நகர், அண்ணாசாலை, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. 

 

30 நிமிடத்தில் வில்லிவாக்கத்தில் 48.5 மிமீ மழை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வடக்கு மற்றும் மத்திய சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வரும் ஜூலை 4ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், சில இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் 6 செமீ மழையும் திருத்தணியில் 5 செமீ மழையும் வால்பாறை, அம்மூரில் தலா 4 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க: டிடிவி தினகரனோடு உறவு; குடும்பத்தை மட்டும் பார்க்கிறார் ஓபிஎஸ்: பரபரப்பை கிளப்பும் உதயகுமார்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண