Watch Video | மக்களே உஷார்..! வீடியோ ஷேர் செய்து அலெர்ட் செய்த குஷ்பு.. கோரிக்கை விடுத்த பி.சி.ஸ்ரீராம்!

சென்னையில் சாலைகளில் வெள்ளம் ஓடுவதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று குஷ்புவும், மாநகராட்சியின் உதவி தேவை என்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும் பதிவிட்டுள்ளனர்.

Continues below advertisement

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கனமழை பரவலாக பெய்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நேற்று நளளிரவு முதல் காலை வரை மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால், பிரதான சாலைகள் உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் குளம்போல தேங்கியுள்ளது. மக்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலர் தங்களுக்கு உதவிகள் தேவை என்றும் சமூக வலைதளங்கள் மூலமாக உதவிகளை கோரி வருகின்றனர்.

Continues below advertisement

இந்த நிலையில், நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னையில் மழையினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பதிவிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“ அனைத்து பகுதிகளிலும் வெள்ளம். விரைவாக புறப்பட்டால்தான் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியும். சாலைகள் திருப்பிவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து மிகவும் மெதுவாக உள்ளது. கவனமாக இருங்கள்” என்று பதிவிட்டிருப்பதுடன், தனது காரில் இருந்து எடுத்த வீடியோவையும் அந்த பதிவில் இணைத்துள்ளார். அந்த வீடியோவில் சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் உள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது.



அதேபோல, பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது டுவிட்டர் பக்கத்தில், “ எனது பகுதியில் வெள்ளம். சென்னை மாநகராட்சியின் உதவி தேவைப்படுகிறது. மழைநீருடன் கால்வாய் நீரும் கலந்து வருவது எனக்கு கவலையளிக்கிறது. முதியவர்களின் ஆரோக்கியத்திற்கு இது கவலையளிக்கும்.“ என்று பதிவிட்டுள்ளார். மேலும், தான் வசிக்கும் பகுதியான ஆழ்வார்பேட்டையில் உள்ள சீதம்னா சாலையில் வௌ்ளம் வடிந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவிற்கு கீழ் சிலர் சென்னை மாநகராட்சியின் உதவி எண்களை பதிவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola