Chennai Rain Update: சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை

Tamil Nadu Rain News Updates: சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது.

ABP NADU Last Updated: 09 Nov 2021 09:16 AM
Chennai Rain Update: சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை

கனமழை காரணமாக சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு தமிழ்நாடு அரசு நாளை விடுமுறை அறிவித்துள்ளது.

Chennai Rain Update: சென்னை கனமழை பாதிப்பு - முதல்வருடன் பிரதமர் தொலைபேசியில் பேச்சு

சென்னை கனமழை பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலனிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

Chennai Rain Update: சென்னையில் மீண்டும் கனமழை ஆரம்பம்

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. கே.கே.நகர், கோடம்பாக்கம், அம்பத்தூர், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Chennai Rain Update: சென்னை முதல் கடலூர் வரை கனமழைக்கு வாய்ப்பு

இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை சென்னை முதல் கடலூர் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார்.


 





Chennai Rain Update: செம்பரம்பாக்கத்தில் நீர் திறப்பு 2000 கனஅடியாக உயர்வு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திறக்கப்படும் நீரின் அளவு 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து ஏற்கெனவே 1000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Chennai Rain Update: வடசென்னையை தொடர்ந்து தென்சென்னையில் முதலமைச்சர் ஆய்வு

வடசென்னையை தொடர்ந்து தென்சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தற்போது வேளச்சேரி பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

Chennai Rain Update: சென்னையில் 6 சுரங்க பாதைகள் மூடல்

கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னையில் 6 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன.  ஈவிஆர் சாலை கங்கு ரெட்டி சுரங்கபாதை, துரைசாமி சுரங்கபாதை, மேட்லி சுரங்கபாதை, வியாசர்பாடி சுரங்கபாதை, கனேஷபுரம் சுரங்க பாதை, வில்லிவாக்கம் சுரங்க பாதை ஆகிய மூடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் தெரிவித்துள்ளது. இதனால், இந்த சுரங்கபாதைகளில் இலகு ரக மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மீண்டும் பலத்த மழை 

சென்னையில் கோடம்பாக்கம், மாம்பலம், அசோக் நகர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. மதியம் சற்று நேரம் மழை விட்ட நிலையில் தற்போது மீண்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

செம்பரம்பாக்கத்தில் நீர் திறப்பு 1000 கனஅடியாக உயர்வு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திறக்கப்படும் நீரின் அளவு 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து ஏற்கெனவே 500 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இப்போது சென்னை வர வேண்டாம் - முதலமைச்சர் முக ஸ்டாலின்

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்புபவர்கள் பயணத்தை 2 நாட்களுக்கு தள்ளி வைக்க முதலமைச்சர் கோரிக்கை. இப்போது சென்னை வர வேண்டாமென கோரிக்கை

4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு வரும் 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு

Chennai Red alert warning: சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு கன முதல் அதி கனமழை வரையில் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.


 

Tamil Nadu Rains: டிஜிபி அலுவலகத்தில் 12மணிநேரத்தில் 22செமீ மழை பதிவாகியுள்ளது.

காலநிலை மாற்றம் ஆர்வலர் ஜி. சுந்தர்ராஜன் ட்விட்டர் பதிவு,   ஒருநாளில் 20செ.மீ மழை பெய்தால் அது “தீவிர காலநிலை நிகழ்வு” என்று கருதப்படும்.  டிஜிபி அலுவலகத்தில் 12மணிநேரத்தில் 22செமீ மழை பதிவாகியுள்ளது.


மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுங்கள்- கமல்ஹாசன்

மநீம உறவுகளே, மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைந்து செய்யுங்கள்; அதுதான் நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கமுடியும் என மக்கள்நீதிமய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.   

சென்னையில் 12 மணி நேரத்தில் 20 செ.மீ மழை - அமைச்சர்

சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நீரை வெளியேற்றும் பணிகளை முடிக்கிவிட மாநகராட்சி தயாராக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


 

சென்னை மழை - உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது


1913, 04425619206, 044 - 25619207, 044 - 25619208


மேலும் 9445477205 என்ற வாட்ஸ் அப் மூலமும் புகாரை தெரிவிக்கலாம்

சென்னை திநகர் துரைசாமி சுரங்கப்பாதை மூடல்

கனமழை காரணமாக சென்னை திநகர் துரைசாமி சுரங்கப்பாதை மூடப்பட்டது

சென்னை மழை நிலவரம் - வெதர்மேன் ரிப்போர்ட்

TamilNadu Rains: வெள்ள அபாயம் - செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று பிற்பகல் நீர் வெளியேற்றம்

செம்பரம்பாக்கம் ஏரி இன்று பிற்பகல் ஒன்றரை மணிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட உள்ளது. 6 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பாதுகாப்பாக தங்க வைக்க ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்ட அலுவலர் வட்டாட்சியர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே 23 அடி உயர்ந்தால் தண்ணீரை திறக்கலாம் என்று அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஏரிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், உபரிநீர் திறப்பது குறித்து அதிகாரிகள் திடீரென ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.  செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டமான 24 அடியில் 21.3 அடி தற்போது நிரம்பியுள்ளது. ஏரிக்கு தற்போது நீர்வரத்து 600 கன அடியாக உள்ளது.


 

வெதர்மேன் அப்டேட்

உபரி நீர் திறப்பு

புழல் ஏரியில் இருந்து இன்று காலை 11 மணிக்கு உபரிநீர் திறப்பு - மாவட்ட ஆட்சியர்

கனமழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழை

இன்று காலை நிலவரப்படி மட்டும் வில்லிவாக்கத்தில் 162 மி.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 145 மி.மீட்டரும், புழலில் 111 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து

செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து - உபரிநீர் திறப்பு குறித்து அவசர ஆலோசனை!

Background

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே 23 அடி உயர்ந்தால் தண்ணீரை திறக்கலாம் என்று அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஏரிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், உபரிநீர் திறப்பது குறித்து அதிகாரிகள் திடீரென ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.