சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் மயங்கிக்கிடந்த கல்லறை பணியாளரை பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்டு தனது தோளில் தூக்கிச்சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்பட அவரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தார்.


இந்த நிலையில், அந்த வாலிபரை மீட்கப்பட்டது எப்படி? என்பது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி பேட்டியளித்தார். அந்தப்பேட்டியில்,  “தொடர் கனழையால் விழுந்திருந்த மரங்களை அகற்றும் பணியில் நானும், என் சக பணியாளர்களும் ஈடுபட்டிருந்தோம். அப்போது, கல்லறையில் ஒருவர் மோசமான நிலையில் மயங்கி கிடப்பதாக போன் கால் எனக்கு வந்தது. உடனே, இருசக்கர வாகனத்தில் சென்று சிலர் உதவியுடன் அவரை மீட்டு வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். நான் மருத்துவமனைக்குச் சென்றேன், அவருடைய அம்மா அங்கே இருந்தார். கவலைப்பட வேண்டாம் என்றும் காவல் துறை அவர்களுக்கு ஆதரவளிக்கும் என்றும் உறுதியளித்தேன். சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் மருத்துவர் கூறினார்” என்று தெரிவித்தார்.






 


கடைசியாக செய்தியாளர் ராஜேஸ்வரியிடம் தங்களின் வயது என்ன என்று கேட்டதற்கு,  ‘மை ஏஜ் இஸ் 53’ என்று சிரித்த முகத்துடன் கூறினார்.


‛பம்பரமா சுத்தி அடிப்பேன்... உங்க பாட்டனுக்கும் கத்துக் கொடுப்பேன்’ அவர் தான் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி!


முன்னதாக,  உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சுயநினைவை இழந்த மனிதனை, தோளில் தூக்கி சுமந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி சிறப்பாக பணியாற்றியுள்ளதாகவும், அவர் ஒரு சிறந்த அதிகாரியாக இருந்திருக்கிறார் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.


 


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண