காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்க உள்ள நிலையில், தமிழ்நாடு, ஆந்திராவில் கனமழை நாளை முதல் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


இதுதொடர்பாக வானிலை தனது டுவிட்டர் பக்கத்தில், ‘காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று நிலத்திற்குள் நுழைந்து பின்னர் வலுவிழந்து வருவதால் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் கனமழை நாளை முதல் குறைய வாய்ப்புள்ளது. இன்றைய மழைப்பொழிவு ஆந்திராவில் அதிகமாக இருக்கும்’ என்று பதிவிடப்பட்டுள்ளது.


சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 75 கிலோ மீட்ட தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து வடகிழக்கு திசையில் 140 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழ்த்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடந்து செல்ல உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


 






இந்த நிலையில், சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 4 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.


முன்னதாக, இரவு முதல் தொடந்து பெய்த கனமழையால் சென்னை நகரின் முக்கிய வர்த்த நகரான தி.நகர் மழைநீர் சற்றும் வடியாமல் முழுவதும் தேங்கியுள்ளது. தி.நகர் மட்டுமின்றி ராயப்பேட்டை, புரசைவாக்கம், அரும்பாக்கம், அமைந்தகரை, கே.கே.நகர், விருகம்பாக்கம், கொளத்தூர், வில்லிவாக்கம், பாடி, ஓட்டேரி, அம்பத்தூர், கோயம்பேடு, கோடம்பாக்கம், பாரிமுனை, நுங்கம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி ஆகிய பகுதிகளின் முக்கிய சாலைகளும் மழைநீரினால் மூழ்கியுள்ளது. மேலும, பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள், குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால், சென்னை மக்களின் இயல்புநிலை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண