தென்கிழக்கு வங்கக் கடல், வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியப் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இது, அடுத்த 24  மணி நேரத்துக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை தமிழக கரையை நெருங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



இதன் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 


 



கனமழைக்கு பொது மக்கள் தயாராக இருக்க வேண்டும் என காவல்துறையின் தலைமை இயக்குனர்  சைலேந்திர பாபு கேட்டுக் கொண்டார். குறிப்பாக, உயிரையும், உடமையும் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.    


தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல், குமரி பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடற்கரை மற்றும் ஆந்திரா கடற்கரையில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இந்த கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


India’s squad: ரோஹித் புதிய கேப்டன்... நியூசி., தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: கோலிக்கு அணியில் இடமில்லை!