ரூ.1543 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாகும் 3 பேருந்து முனையங்கள் - ஒப்பந்தப் புள்ளியை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. 


நவீனமாகும் பேருந்து நிலையங்கள்:


திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய மூன்று  பேருந்து நிலையங்கள் ரூ.1543  கோடி மதிப்பில் நவீன மயமாக்கப்பட்ட உள்ளன. வணிக வளாகங்கள், அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள், நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மூன்று பேருந்து முனையங்களும் புதுப்பிக்கப்பட உள்ளன.


திருவான்மியூர் பேருந்து முனையம் ரூ.446 கோடி மதிப்பிலும், வடபழனி பேருந்து முனையம் ரூ. 610 கோடி மதிப்பிலும், வியாசர்பாடி பேருந்து முனையம் ரூ.485 கோடி மதிப்பிலும் நவீன மயமாக்கப்பட உள்ளன. மழை காலங்களில் மழைநீர் தேங்கி  நிற்காத வகையிலும், மழைநீர் வடிகால் வசதியுடன் பேருந்து முனையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன.