ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்களிக்க சென்ற தேமுதிக வேட்பாளர் ஆனந்த் கட்சியின் துண்டு மற்றும் கரை வேட்டியை அணிந்து சென்றதால் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது.


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல்  தொடங்கியுள்ளது. கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 238 வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர்கள் வாக்களிக்க வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்த், BP அக்ரஹாரம் பகுதியில் உள்ள , மதரஸா ஹிதாயத்துல் இஸ்லாம் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், தனது வாக்கினை பதிவு செய்ய தேமுதிக துண்டும், கரை வேட்டியும் அணிந்து சென்றிருந்தார். இந்த இரண்டும் கட்சியை குறிப்பிடும் வகையில் இருந்ததால் அவருக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வாக்குச்சாவடி அலுவலருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின் அவர் கட்சி துண்டும் கரை வேட்டியும் மாற்றி வேறு உடை அணிந்து வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். 


மேலும், வாக்குச்சாவடி அலுவலர் குளோத்துங்கன், வாக்களிக்க வரும் அனைவரும் கட்டாயமாக வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என நிர்பந்தம் செய்து வாக்களிக்க வந்த மக்களளை வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் தேமுதிக வேட்பாளர் ஆனந்திடம் முறையிட்டதை அடுத்து, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், சம்பந்தப்பட்ட அலுவலரிடம், நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மதியம் வரை ஏதேனும் ஒரு ஆவணங்களின் அடிப்படையில் வாக்களிக்க அனுமதிப்பதாக உறுதியளித்தார். அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி, வாக்களார்கள் வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், வாக்குச்சாவடி அலுவரின் இந்த அறிவிப்பால்,வாக்காளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.


ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.  மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் இருந்த நிலையில், அதனைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறியப்பட்ட 34 மையங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  


 12 அடையாள அட்டை 


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களிடம் வாக்காளர் அட்டை இல்லாத பட்சத்தில், இந்த 12 வகையான அடையாள அட்டைகளை பயன்படுத்தி தங்களது வாக்குகளை செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆதார் அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு,  புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய பேங்க் அக்கவுண்ட், போஸ்ட் ஆபிஸ் அக்கவுண்ட், பாஸ்போர்ட், மத்திய - மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, எம்.பிக்களாக இருந்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்படும் தனித்துவமான இயலாமைக்கான அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து தங்களது வாக்குகளை செலுத்தி கொள்ளலாம். 


மாநிலங்களில் இடைதேர்தல்:


தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்குத் தொகுதியை போன்றே, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள லும்லா, மேற்கு வங்கத்தில் சாகர்டிகி மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் ஆகிய காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கள்