நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல் தலைவர் பாலச்சந்திரன் இன்று பேட்டி அளித்தார். அப்போது, "குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு" என அவர் தெரிவித்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு என கணிக்கப்பட்டுள்ளது. 


சிதம்பரத்தில் அதிகபட்சமாக 8 செ.மீ மழை பெய்துள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என கணிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் இதுவரை 12 செ.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அக்.1 முதல் இன்று வரை 19 செ.மீ மழை பெய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


 






அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக புரசைவாக்கம் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.


அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக ஆற்காடு, கலவை பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது


அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக செய்யூர், திருப்போரூர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.


அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக வாலாஜாபாத், காஞ்சிபுரம், திருக்கழுகுன்றம் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.


அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக திருத்தணி பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.


அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக ஆற்காடு, செய்யூர், குன்றத்தூர், நெமிலி, சோளிங்கர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.


அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக அரக்கோணம், வாலாஜாபாத், திருக்கழுகுன்றம், வாலாஜாபேட்டை, அம்பத்தூர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.


அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக கும்மிடிப்பூண்டி பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.


நவம்பர் 3 முதல் 6 வரை: இன்று (நவ. 3) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.



வரும் 5-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும், வரும் 6-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.




இன்று (நவ.3) காலை முதலே சென்னையில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. காலை 10 மணி தொடங்கியத்திலிருந்து அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் மழை பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.