108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கான வேலை வாய்ப்பு முகாம்


இடம்: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை
நாள்: 05.11.23
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை.


மருத்துவ உதவியாளருக்கான அடிப்படை தகுதிகள்


பிஎஸ்சி நர்சிங், அல்லது ஜி என் எம், DMLT(12 ஆம் வகுப்பிற்கு பிறகு இரண்டு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது கீழே குறிப்பிட்டுள்ள அறிவியல் சார்ந்த இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும், Zoology, Botany, Bio Chemistry, Micro Biology, Biotechnology.


வயதுவரம்பு:  19 இல் இருந்து 30 வயதுக்குள்  இருக்க வேண்டும்


மருத்துவ உதவியாளருக்கான மாத ஊதியம்: Rs 15,435 


தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மனிதவளத்துறை தேர்வு.


ஓட்டுநருக்கான அடிப்படை தகுதிகள்:



பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் Badge பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு : 24 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.


உயரம்: 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்


அனுபவம்: வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று மூன்று வருடங்கள் குறையாமல் இருக்க வேண்டும் மற்றும் Badge பெற்று ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.


மாத ஊதியம்: Rs 15,235/-


தேர்வு முறை: எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை  நேர்காணல், சாலை விதிகளுக்கான தேர்வு மற்றும் கண் பார்வை திறன் தேர்வு. இதில் இலவச தாய் சேய் நல வாகன ஓட்டுனர்களுக்கான பணியிடங்களும் நிரப்பப்படும்(FHS/JSSK).


மேலும் விவரம் அறிய:


04428888060,


04428888077,


04428888075.


 




Photography Course: ஃபோட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு. இலவச வகுப்புகள் குறித்து விவரம்


செங்கல்பட்டு மாவட்டம் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், இந்தியன் வங்கி இணைந்து நடந்தும் ஒரு மாத கட்டணமில்லா வீடியோகிராபி, ஃபோட்டோகிராபி 30 நாள்கள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. ஃபோட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி கற்றுக்கொள்ள வேண்டும் என விருப்பம் உள்ளவர்கள் இந்த பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தகுதிகள் என்னென்ன என்பதை காணலாம்.


கல்வி மற்றும் பிற தகுதிகள்


இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


விவரம்


இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவர்களுக்கு சீருடை, காலை, மதிய உணவு, காலை மற்றும் மாலை தேநீர் இலவசமாக வழங்கப்படும். 


பயிற்சி காலத்தில் கேமரா, வீடியோ கேமரா போன்ற உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். 


பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.


பயிற்சி வகுப்பு நேரம்:


30 நாள்களுக்கு தினமும் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். 


விண்ணப்பிப்பது எப்படி?


விருப்பம் உள்ளவர்கள் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். 


நேர்காணல் நடைபெறும் நாள் - 06.11.2023


நேர்காணல் நடைபெறும் இடம்:


https://maps.app.goo.gl/5Tx9aKQ3VAYCJD5U8 - என்ற இணைப்பை க்ளிக் செய்து நேர்காணல் நடைபெறும் இடத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். 


மேலும் விவரங்களுக்கு....


இந்தியன் வங்கு ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்


கோகுலம் RPN வணிக வளாகம், முதல் தளம்,
எண்:24, மகாலெட்சுமி நகர், திம்மாவரம்,
செங்கல்பட்டு - 603 101


தொடர்புக்கு..


8883735122


7010107832


7092787785