தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மாலத்தீவில் இருந்து வடகடலோர கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. நாளை முதல் தமிழ்நாட்டில் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 8, திருக்குவளை, கோடியக்கரையில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண