வெளிநாட்டு பயணிகளை பரிசோதித்து தனிமைப்படுத்தக் கோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுமக்களின் நலன் கருதி  கொரோனா தொற்று பரவல் தனியும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியது. மேலும். இந்த  வழக்கை முடித்து வைத்தும் உத்தரவிட்டது.


முன்னதாக, கொரோனா காலத்தில் நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் தேவை குறித்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 9ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையாக விலக்கிக்கொள்ளப்படவில்லை எனவும் நீதிபதிகள் கருத்து கூறினர். மேலும், இயல்புநிலை திரும்பியது போல வெளியில் காட்சியளிப்பதாகவும், இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை எனக்கூறிய நீதிபதிகள், ஊரடங்கு காலத்தில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.


TN Class 11 Admissions: பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடக்கம்


அசவுகரியங்களை குறைக்கவே தளர்வுகள் என்பதை மக்கள் உணரும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நீதிபதிகள் கூறியதற்கு, கொரோனா முதல் அலை ஊரடங்கில் காவல்துறை கடுமையாக நடந்து கொண்டதால் பல இடங்களில் பிரச்னை ஏற்பட்டதாகவும், காவல்துறை தற்போது கனிவுடன் நடப்பதை மக்கள் சாதகமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அரசு விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.




கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன், ஜூன் 21ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக கடந்த 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். கொரோனா நோய்த் தொற்று தினசரி பாதிப்பு அதிகமுள்ள கோயம்பத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத்  தவிர்த்து இதர 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தன. 


கடந்த 20 நாட்களாக 400க்கும் மேற்பட்ட தினசரி கொரோனா இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 267 பேர் என்ற குறைந்த அளவிலான கொரோனா இறப்பை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது. 


தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 92.37% குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 25,895 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,49,927  ஆக குறைந்துள்ளது.  


Dasavathaaram | ‛அது எப்படினு சொல்லுங்க...’ கமலிடம் கேட்ட பிரபல இயக்குனர்!