நோய்த் தோற்றுப் பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியது. 


பள்ளிகளில் வகுப்பு நடத்த அனுமதி கிடையாது என்றும், மாணவர்கள் பள்ளி,கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கைக்கான விண்ணப்பிப்பது அல்லது மாற்றுச் சான்றிதழ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்  என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. 


College Admissions


அனைத்து வகைப் பள்ளிகளிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதுகுறித்துச் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து வகைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை இணையதளம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. 


TN School Education : 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!


தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு சேர்க்கை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், மாணவர்களின் விருப்பத்துக்கேற்ப பாடப்பிரிவுகளை ஒதுக்கிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும்,"அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தால், அவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி, அதில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்" என்றும் கூறப்பட்டது. 


அனால், எதிர்க்கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பையடுத்து," 11ம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுகள் வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.   




இருப்பினும், தனியார் பள்ளிகளைப் பொறுத்த வரை, ஆன்லைனிலோ அல்லது நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டால் நேரடியாகவோ, 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தேவையான சில வினாக்கள் கொண்ட நுழைவுத் தேர்வினை அந்தந்தப் பள்ளி அளவில் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக அனுமதி வழங்கியிருந்தது.  


11-ஆம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வா? மருத்துவர் ராமதாஸ் கண்டனம்


கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 


மேலும், இந்தாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வையும் ரத்து செய்வதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார் . மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது குறித்து முடிவு செய்ய, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் உயர்கல்வித்துறை செயலாளர், சென்னை பல்கலைகழக துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்படும்.  அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.  




மேலும், பெருந்தொற்று காரணமாக தமிழ்நாட்டில் பொதுத்தேர்வுகள் முழுவதும் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்திய அளவில் நடத்தப்படும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளை நடத்துவது உகந்ததாக இருக்காது என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.