பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதை விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு எஸ்.வி.சேகர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 3 பிரிவுகள் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் ஒரு பிரிவு என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
]இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது பெண் நிருபர்களை பேசிய விவகாரம் தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த போது புகார்தாரர் சார்பில் கடந்த 2020ஆம் ஆண்டில் நடிகர் எஸ்.வி. சேகர் சமூக வலைத்தளங்களில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிட்ட பதிவுகளை அவர் மறுபதிவு (Re Tweet) செய்துள்ளதாகவும், அதனை நீக்கியுள்ளதற்காக பதிவுகளை நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. அப்பொழுது குறுக்கிட நீதிபதி மற்ற பதிவுகளை அவர் படிக்காமல் பகிர்ந்ததை ஏற்று கொள்ளலாம் ஆனால் இதுபோன்று மறுபதிவு செய்ததை ஏற்று கொள்ள முடியாது. சமுதாயத்தில் பொறுப்பான மனிதராக இருந்து கொண்டு இது போன்ற செயலை செய்வது ஏற்று கொள்ள முடியாது. நடிகர் எஸ்.வி.சேகரிடம் இதுதொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்..
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Festival : விவசாயத்தை கொண்டாடும் கிராம திருவிழா.. மதுரையில் களைகட்டிய நல்லேறு கட்டுதல் நிகழ்வு..