அக்டோபர் 9 முதல் 19ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவற்றிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வருகிற அக்டோபர் 15ம் தேதி தசரா பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தசரா பண்டிகை வட மாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்படும். இதனையடுத்து, தெலுங்கானா மாநிலத்தில் நேற்று முதல் (அக்டோபர் 6) முதல் 17ம் தேதி வரையில் தசரா விடுமுறை அறிவித்து அம்மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.


இதையும் படிக்க: 


திருவண்ணாமலையில் 1200 ஆண்டுகாலம் பழமையான பல்லவர் கால ஐயனார் சிலை கண்டுபிடிப்பு...!


சடலத்தின் மீது அமர்ந்து பூஜை செய்த அம்மண அகோரி... நடந்தது காசியில் அல்ல திருச்சியில்!


Navratri 2021: 9 நாள் நவராத்திரி: ஏன் கொண்டாடுகிறோம்? எப்படி கொண்டாட வேண்டும்... ஒவ்வொரு நாள் விழா இது தான்


தமிழகத்திலும் பூஜை விடுமுறை வழக்கமாக இருக்கும் ஒன்றுதான். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகியவற்றிற்கு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். இந்த காலக்கட்டத்தில் நீதிமன்றங்களுக்கு நீண்டகால விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் நடப்பாண்டிற்கான தசரா பண்டிகை விடுமுறையை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆகியவை அறிவித்துள்ளன.


அதன்படி வருகிற அக்டோபர் 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆகிய நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அக்டோபர் 12ம் தேதியான செவ்வாய்க்கிழமையில் மட்டும் விடுமுறைக்கால நீதிமன்றம் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அவசரகால வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபப்டும். 
அதே போல உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அக்டோபர் 11ம் தேதி மட்டும் அவசரகால வழக்குகளைத் தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண