1. தேனி மாவட்டம் கம்பம் பகுதி பழவியாபாரியிடம் 6 லோடு ஆப்பிள் வாங்கி சுமார் 10 லட்சம் பணம் தராமல் ஏமாற்றியதாக புதுச்சேரி வியாபாரி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2. மதுரை மாநகராட்சி பகுதிகளிலுள்ள சாலை விபத்து ஏற்படுத்தும் வகையில் மாடு உட்பட கால்நடைகளை திரிய விட்டால் அபராதம் விதிக்கும் நடைமுறையை பின் பற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் ரோட்டில் திரிந்த 29 மாடுகளின் உரிமையாளர்களுக்கு 50,800 அபராதம் விதிக்கப்பட்டது.
3. 'தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் அமைக்க ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்த வாய்ப்பு இல்லை என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
4. பெரியகுளம் வடவீர நாயக்கன்பட்டியில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட 94.65 ஏக்கர் மீண்டும் அரசு நிலமாக பதிவு செய்யப்பட்டது. நில மோசடியில் சர்வேயர் பிச்சைமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
5. சாத்துாரில் அ.தி.மு.க.,வினரிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிடப்பட்டது.
6. தமிழகத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மதுரையின் பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வத்திடம் இனிமேல் குற்ற செயல்களில் ஈடுபட்டமாட்டேன் என்று 110 CRPC பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது
7. சிவகங்கை அருகே சாலையில் விழுந்த மரத்தில் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்தார். அவ்வழியாக காரில் சென்ற அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மீட்பு பணியில் ஈடுபட்டார்.
8. சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தடையை மீறி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்களை போலீஸார் விரட்டினர்.
9. சிவகங்கை அருகே உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து போலீஸ் பாதுகாப்போடு புரவி எடுப்பு விழா நடந்தது.
10. ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மட்டும் 10 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.