டாஸ்மாக் நிறுவனத்துக்கு, எந்த நிறுவனங்களிடமிருந்து, எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது என்பது குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வழக்கு: 


கடந்த 2015 ஆம் ஆண்டு, கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தகவல் கேட்டிருந்தார். 


அதில், எவ்வளவு தொகைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது, எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்யப்படுகிறது உள்ளிட்ட தகவல்களை கேட்டிருந்துள்ளார். ஆனால், டாஸ்மாக் நிறுவனம் தகவல் அளிக்கவில்லை.


நீதிமன்றம் உத்தரவு:


இதையடுத்து, கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


அதில் தெரிவித்துள்ளதாவது, எந்த நிறுவனங்களிடமிருந்து, எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது என்றும், மதுபானம் கொள்முதல் செய்யப்படும் நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த விவரங்களை சீலிடப்பட்ட கவரில், ஜனவரி 6ஆம் தேதி சமர்ப்பிக்குமாறும் டாஸ்மாக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும், இதற்கு முன்பு சமர்பிக்க தவறிய டாஸ்மாக் நிறுவனத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அந்த தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.


Also Read: Pongal Sugarcane : பொங்கல் பரிசு பெட்டகத்தில் கரும்பு வழங்கக்கோரி வழக்கு.. நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை


Also Read: வனத்துறை அனுமதியில்லாமல் மரங்கள் வெட்டுவதை தடுக்க விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் மதிவேந்தன்…