தெற்கு ரயில்வே துறை சார்பாக மக்களின் தேவைகளுக்கு ஏற்ப ரயில் சேவைகள் அவ்வப்போது நீட்டிக்கப்படுவது வழக்கம். மேலும் தமிழ்நாட்டில் ரயில் சேவையை அதிகரிக்க பல்வேறு சிறப்பு  திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். 


இந்நிலையில் ரயில்வே அட்டவணைகளில் சில மாற்றங்கள் செய்து, ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் எக்ஸ்பிரஸ் இரயில்கள், பயணிகள் இரயிலுக்கான கால அட்டவணை வெளியிடப்படும். இந்த அட்டவணையில் புதிய இரயில்களின் இயக்கம், கூடுதல் இரயில் நிறுத்தம், இரயில்கள் இயங்கும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும்.


இந்த நிலையில், புதிய இரயில்வே அட்டவணை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 1-ந் தேதி வெளியிடப்படும் என இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளது. சில நிர்வாக காரணங்களுக்காக நீட்டிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு அனைத்து பொது மேலாளர்களுக்கும் சுற்றரிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. எனவே டிசம்பர் 31-ந் தேதி வரை பழைய இரயில்வே அட்டவணை பின்பற்றப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். 


இதே போல, புதிதாக வர இருக்கிற அட்டவணைக்கு தென்மாவட்ட மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் இரயில்கள் கடும் கூட்ட நெரிசலுடன் செல்வதால் பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.


புதிய அட்டவணை மூலம் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.




எழும்பூர் - நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு


இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கு அதிக ரயில் சேவை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியது..


நெல்லையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06030) வரும் 7, 14, 21, 28 ஆகிய தேதிகள் வரையிலும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லை வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06029) வரும் 8, 15, 22, 29 ஆகிய தேதிகள் வரையிலும் (திங்கட்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.


மேலும், நெல்லையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06030) வரும் 7, 14, 21, 28 ஆகிய தேதிகள் வரையிலும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லை வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06029) வரும் 8, 15, 22, 29 ஆகிய தேதிகள் வரையிலும் (திங்கட்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதேபோல, நெல்லையிலிருந்து சென்னை எழும்பூர் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06070) வரும் 4, 11, 18 ஆகிய தேதிகள் வரையிலும் (வியாழக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06069) வரும் 5, 12, 19 ஆகிய தேதிகள் வரையிலும் (வெள்ளிக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.