இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து சேவைத்துறையாக ரயில்வே துறை விளங்குகிறது. இதனால், மத்திய அரசு ரயில்வே துறையில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு புதிய ரயில்களை இயக்கி வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசால் அதிவேகமாகவும், நவீன வசதிகளுடனும் தொடங்கப்பட்டது வந்தே பாரத் ரயில்.

புதிய வந்தே பாரத் ரயில்:


நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் வந்தே பாரத் ரயில் மூலமாக இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில், இன்று பிரதமர் மோடி 3 புதிய வந்தே பாரத் ரயில்களை இயக்க உள்ளார்.


அந்த வகையில், பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள வந்தே பாரத் ரயிலில் 2 ரயில்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறது. சென்னை எழும்பூர் - நாகர்கோயில், மதுரை – பெங்களூர் ரயில்கள் தமிழக பயணிகளுக்கு வசதியாக அமைந்துள்ளது. வந்தே பாரத் ரயில் மற்ற ரயில்களை காட்டிலும் அதிவேகமாக சென்றாலும், நவீனமாக இருந்தாலும் அதன் கட்டணம் சாமானியர்களும் பயணிக்கும் வகையில் அமையாதது பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் விதமாகவே அமைகிறது.


கட்டணம்:


இன்று புதியதாக தொடங்க உள்ள சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையேயான வந்தே பாரத் ரயிலின் கட்டண விவரத்தை கீழே விரிவாக காணலாம்.


எழும்பூர்  - தாம்பரம்      :  ரூ.380 , ரூ.705 ( எக்சிகியூட்டிவ்)    
எழும்பூர் – விழுப்புரம்    : ரூ. 545, ரூ.1055      (    "   )
எழும்பூர் – திருச்சி           :  ரூ.955,  ரூ.1790     (    "   )
எழும்பூர் -  திண்டுக்கல் : ரூ.1105, ரூ. 2110    (    "   )
எழும்பூர் – மதுரை           : ரூ.1200, ரூ. 2,295    (    "  )
எழும்பூர் – கோவில்பட்டி:ரூ.1350, ரூ.2,620     (    "  )
எழும்பூர் – நெல்லை       : ரூ.1,665, ரூ.3,055    (    "   )
எழும்பூர் – நாகர்கோயில் : ரூ. 1760, ரூ.3240  (    " )

----------


நாகர்கோயில் – நெல்லை         : ரூ.440, ரூ. 830  ( எக்சிகியூட்டிவ்) 
நாகர்கோயில் – கோவில்பட்டி : ரூ.515,  ரூ.985      (     "     )
நாகர்கோயில் – மதுரை            : ரூ.735,   ரூ.1405    (     "     )
நாகர்கோயில் – திண்டுக்கல்  : ரூ.850,    ரூ.1635    (     "     )
நாகர்கோயில் – திருச்சி            : ரூ.1000, ரூ.1945    (     "     )
நாகர்கோயில்  - விழுப்புரம்     : ரூ.1510, ரூ.2775    (     "     )
நாகர்கோயில் – தாம்பரம்        : ரூ.1700, ரூ.3175    (     "     )
நாகர்கோயில் – எழும்பூர்         : ரூ.1735, ரூ.3220    (     "     )

சாதா ரயில்களின் கட்டணத்தை காட்டிலும் இந்த கட்டணம் பன்மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.