சென்னையில் மின்சாரம் தாக்கியதில் மாநகராட்சி ஊழியர்கள் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நான்கு பேரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


மணலி புதுநகரில் பேருந்து நிழற்குடையை மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது பணியில் இருந்த கிரேனில் இருந்து மின்சாரம் பாய்ந்ததால் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.