தனியார் பள்ளிப் பேருந்து ஓட்டையில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட  8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


செங்கல்பட்டு மாவட்டம் 2012 ஜூலை 25 ஆம் தேதி , தாம்பரம் சீயோன் பள்ளி மாணவி சுருதி பேருந்தில், இருந்து டயருக்கு பக்கத்தில் ஓட்டையில் விழுந்து உயிரிழந்த வழக்கில், 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 8 பேர் மீது செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்,  வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 8 பேரும் விடுதலை செய்து நீதிமன்ற நீதிபதி காயத்ரி உத்தரவு பிறப்பித்துள்ளார். 


10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.