நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் குழித்துறை அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் 20 அன்று இரவு குருவாயூரிலிருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16128) மற்றும் நவம்பர் 21 அன்று காலை சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) ஆகியவை திருநெல்வேலி - குருவாயூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.



இதை சற்று கவனிக்கவும் -Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

நவம்பர் 20 அன்று இரவு சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (16723) மற்றும் நவம்பர் 21 அன்று மாலை கொல்லத்தில் இருந்து புறப்பட வேண்டிய கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (16724) ஆகியவை நாகர்கோயில் - கொல்லம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக செய்யப்படுகிறது.

 

நவம்பர் 21 அன்று காலை திருச்சியிலிருந்து புறப்பட வேண்டிய திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22627) மற்றும் நவம்பர் 21 அன்று முற்பகல் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட வேண்டிய திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22628) ஆகியவை திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

 


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு...!

நவம்பர் 21 அன்று திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி - பிலாஸ்பூர் சிறப்பு ரயில் (06070) திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும். நவம்பர் 20 & 21 ஆகிய நாட்களில் இரவு மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16729) திருநெல்வேலி வரை இயக்கப்படும். மறு மார்க்கத்தில் இந்த ரயில் (16730) திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 04.00 மணிக்கு புறப்பட்டு மதுரை வந்து சேரும்.