கரூர் மண்டலத்தில் மகளிருக்கு கட்டணமில்லா பஸ்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், இளஞ்சிவப்பு பிங்க் வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கரூர் மன்றத்தில், கரூர் 1, கரூர் 2, அரவக்குறிச்சி குளித்தலை என 4 பணிமனைகள் உள்ளன. இவற்றில் 90 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பெண்கள் கட்டணம் என்று பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பயணரின் எண்ணிக்கை 62 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இலவச பயணம் டவுன் பஸ்களை பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், டவுன் பஸ்களுக்கு இளஞ்சிவப்பு (பிங்க்) நிறம் பூச முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உட்பட பல்வேறு மாநகரங்களில் டவுன் பஸ்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் மாற்றப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன. கரூர் மண்டலத்தில் கரூர் -சேங்கல், கரூர்- வேலூர் ஆகிய வழித்தடங்களில் இயங்கும் இரண்டு பஸ்களுக்கு இளஞ்சிவப்பு நிறம் பூசப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது,
பெண்கள், மாற்று திறனாளிகள், திருநங்கையர் எளிதில் அடையாளம் காணும் வகையிலும், கட்டணம் இல்லா பயணச் சலுகை பஸ்களையும், தனிநிறம் பூச முடிவு செய்தோம். அதன்படி பஸ்ஸின் முன் மற்றும் பின் பகுதியில் இளஞ்சிவப்பு நிறம் பூசும் பணிகள் நடக்கிறது. மாதிரிக்காக இரண்டு பஸ்களில் வண்ணம் பூசப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. பின் படிப்படியாக மற்ற அனைத்து பஸ்களிலும் இளஞ்சிவப்பு நிறம் பூசப்படும்.
தமிழ்நாடு முழுவதும் இலவச கட்டணமில்லா மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்கள் எளிதில் செல்லும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைத்தார். அந்தப் பேருந்தில் காவி நிற வண்ணம் பூசப்பட்டிருக்கும். ஆனால், அதை எளிதில் அடையாளம் காண முடியாமல், சில பேர் தவிர்த்து வருகின்றனர். ஆகையால் காவி நிறத்திற்கு பதிலாக (பிங்க்) இளஞ்சிவப்பு நிறம் மாற்றப்பட்டு, புதிதாக கரூர் மாவட்டத்தில் இரண்டு பஸ்கள் துவங்கியுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் படிப்படியாக அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினார்.
திருச்சி - தோகைமலை நெடுஞ்சாலையில் முச்சடிகளால் போக்குவரத்து இடையூறு.
குளித்தலை அடுத்து தோகைமலை - திருச்சி நெடுஞ்சாலையில் வெள்ளப்பெட்டியில் இருந்து இடையபட்டி, கீழவெளியூர், காவல் காரன்பட்டி, ஆட்டி மலை, ஒத்தக்கடை வரை சாலையோரம் இருபுறங்களிலும் முச்சடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இச்சாலையில் நெடுஞ்சாலை பெயர், பலகை, பாலம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி, கரூர், தோகை மலை, பாளையம், குளித்தலை, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், கனரக வாகனங்கள், கார், பைக் மற்றும் டிராக்டர்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், சாலையின் இருபுறங்களிலும் முட்செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளதால், வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டு, அடிக்கடி விபத்துக்கள் நேருகின்றன. எனவே, நெடுஞ்சாலை ஓரம் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.