அடுத்த 3 மணி நேரம்


தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


திருவள்ளூர் மற்றும் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:


”1.தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி  வருகின்ற  15-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.


2. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,


10.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.


11.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 
 
12.11.2023 மற்றும் 13.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


14.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான /  மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 32-33 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):


சிவலோகம் (சிற்றாறு-II) (கன்னியாகுமரி) 9, திருப்பூர் PWD, குழித்துறை (கன்னியாகுமரி), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை) தலா 8, நன்னிலம் (திருவாரூர்) 7, அம்பத்தூர் (சென்னை), களியல் (கன்னியாகுமரி), மண்டலம் 03 புழல் (சென்னை), பாம்பன் (ராமநாதபுரம்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) தலா 6,  நீடாமங்கலம் (திருவாரூர்), புழல் ARG (திருவள்ளூர்), காரைக்கால், மண்டலம் 06 திரு.வி.க.நகர் (சென்னை), மண்டலம் 07 U18 D81 வானகரம் (சென்னை), மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), திருப்பூர் தெற்கு,  மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை) தலா 5, 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை”.