அடுத்த மூன்று மணி நேரம் 


தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:


”தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.


இன்று (ஜனவரி 19) தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஏனைய  மாவட்டங்கள் மற்றும்  புதுவையில்  வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.


நாளை ( ஜனவரி 20) தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஏனைய  மாவட்டங்கள் மற்றும்  புதுவையில்  வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.


ஜனவரி 21 முதல் 25ஆம் தேதி வரையில்,  தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 


உறைபனி எச்சரிக்கை:


19.01.2024 மற்றும் 20.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக் கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  


வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 1.” இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க 


ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கடும் எதிர்ப்பு.. திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு


Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா! புதுச்சேரிக்கு 22ம் தேதி பொது விடுமுறை - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு


Gayathri Raghuram Joins AIADMK: அரசியலில் பரபரப்பு..! அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்