தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


”மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,   


10.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


12.08.2023 முதல் 16.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 


கொள்ளிடம் (அரியலூர்) 15, BASL முகையூர் (விழுப்புரம்) 12, கிராண்ட் அணைக்கட்டு  (தஞ்சாவூர்), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), கும்பகோணம் (தஞ்சாவூர்) தலா 11, பரங்கிப்பேட்டை (கடலூர்), லக்கூர் (கடலூர்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்) தலா 10, தொழுதூர் (கடலூர்) 9, வேப்பந்தட்டை (பெரம்பலூர்), கீழ அணைக்கட்டு (தஞ்சாவூர்) தலா 8, பெலாந்துறை (கடலூர்), புள்ளம்பாடி (திருச்சி), வட்ராப் (விருதுநகர்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), வீரகனூர் (சேலம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), சிதம்பரம் (கடலூர்), மயிலாடுதுறை, கங்கவல்லி (சேலம்) தலா 7, சுத்தமல்லி அணை (அரியலூர்), சிறுகமணி KVK AWS (திருச்சி), காஞ்சிபுரம், நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி), தழுதலை (பெரம்பலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), தர்மபுரி PTO (தர்மபுரி) தலா 6, காரைக்கால், நந்தியார் (திருச்சி), நன்னிலம் (திருவாரூர்), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), பொன்மலை (திருச்சி), கிளாசெருவை (கடலூர்), வி.களத்தூர் (பெரம்பலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), புவனகிரி (கடலூர்), (கள்ளக்குறிச்சி), மதுராந்தகம் (செங்கல்பட்டு), கொள்ளிடம் (மயிலாடுதுறை), லால்குடி (திருச்சி), திருமானூர் (அரியலூர்), ஏற்காடு (சேலம்), வேப்பூர் (கடலூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), சிதம்பரம் AWS (கடலூர்), ஈரோடு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சி), தஞ்சாவூர்) தலா 5, தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), சேத்தியாதோப்பு (கடலூர்), DSL மாதம்பூண்டி (கள்ளக்குறிச்சி), டேனிஷ்பேட்டை (சேலம்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), திருச்சி விமான நிலையம், பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), மதுரை விமான நிலையம்,  ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), காட்டுமயிலூர் (கடலூர்), DSL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), சீர்காழி (மயிலாடுதுறை), DSL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), துவாக்குடி IMTI (திருச்சி), மணல்மேடு (மயிலாடுதுறை), DSL  திருப்பாலப்பந்தல் (கள்ளக்குறிச்சி), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), பேரையூர் (மதுரை) தலா 4, 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை". இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.