கரூரில் அரசு கிராம சுகாதார செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து அரசுக்கு எதிராக பெரும் திரள்  கண்டன  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


 


 




 


அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய பெரும் திரள் கண்டன அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறுகிறது. அதன் ஒருபகுதியாக கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு செவிலியர் சங்க மாநில பொதுச்செயலாளர் நீலா தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டு அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அச்சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் நீலா கூறுகையில் கிராம சுகாதார செவிலியர் மீது வேலைப்பளுவை சுமத்தியும் பணி நியமனம் வழங்கப்பட்ட data entry oprater பதவியும் சேர்த்து பார்த்திட வலியுறுத்தும்  அரசாணையை திரும்ப பெறவும்.


 




 


ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் நியமிக்க வேண்டும். எனவும் எஸ் .ஹெச்என் காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிடவும் மேலும் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் சேதமடைந்த காரணத்தால் சட்டப்பேரவையில் அறிவித்தவாறு புதிய துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் கட்டி தர வேண்டும். பொழுதடைந்த துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் குடியிருக்க தகுதியே இல்லாதது என்று பொதுப்பணி துணை பொறியாளர் சான்றிதழ் அளித்த பிறகும் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்வதை உடனடியாக நிறுத்தவும்.


 




 


ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்கிடவும் மேலும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப ஊரகப்பகுதி  மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையவும் தாய் சேய் நலப்பனை தடுப்பூசி பணிகளை சிறப்பாக செயல்படுத்திடவும் தற்போதுள்ள துணை சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் மாநகராட்சியின் பணி புரியும் யு ஹச் எம் எல் மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி காலியாக உள்ள 160 பகுதி சுகாதார செவிலியர் பணியிடங்கள் பதிவு உயர்வு வழங்கிட வழங்கப்பட்ட தீர்ப்பை அமுல்படுத்த வேண்டியும் டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்ட பணிகளை மேற்கொள்வதில் உள்ள சிரமங்களை களைய வட்டார அளவில் ஒரு சுகாதார எஸ் ஹெச்என் பதவி மற்றும் இரு விஹெச்என் பதவிகளை ஏற்படுத்தி சுகாதார செவிலியர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும் எனவும் கூறினார். தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தராவிட்டால் மாநிலம் தழுவிய அனைத்து கிராம செவிலியர்களையும் அழைத்து சென்னையில் பெருந்துறை போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.