நேற்று (27.12.2022) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று (28.12.2022) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது.

28.12.2022 முதல் 30.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

31.12.2022 மற்றும் 01.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 23-24  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.  

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):    

பாபநாசம் (திருநெல்வேலி) 12, ஆயிக்குடி (தென்காசி), காக்காச்சி (திருநெல்வேலி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), ஊத்து (திருநெல்வேலி) தலா 5, நாலுமுக்கு (திருநெல்வேலி) 4, மாஞ்சோலை (திருநெல்வேலி), ராதாபுரம் (திருநெல்வேலி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), காயல்பட்டினம் (தூத்துக்குடி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), கடனா அணை (திருநெல்வேலி) தலா 3,  தென்பரநாடு (திருச்சி), செங்கோட்டை (தென்காசி), பெரம்பலூர், ஏற்காடு (சேலம்), தென்காசி, பேரையூர் (மதுரை), நிலக்கோட்டை (திண்டுக்கல்) தலா 2, அவலூர்பேட்டை (விழுப்புரம்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), தழுதலை (பெரம்பலூர்), செங்கம் (திருவண்ணாமலை), மஞ்சளார் (தேனி), வீரபாண்டி (தேனி), சிவகிரி (தென்காசி), சிறுகுடி (திருச்சி), சோத்துப்பாறை (தேனி), ஹரூர் (தருமபுரி), திருப்பத்தூர், திருநெல்வேலி, பாளையங்கோட்டை (திருநெல்வேலி), நந்தியார் (திருச்சி), கங்கவல்லி (சேலம்), வீரகனூர் (சேலம்), செட்டிகுளம் (பெரம்பலூர்), ஆனைமடுவு அணை (சேலம்), திண்டுக்கல்,, பாரூர் (கிருஷ்ணகிரி), புலிப்பட்டி ( மதுரை), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), வாத்தலை அணைக்கட்டு (திருச்சி), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), கும்பகோணம்  (தஞ்சாவூர்), திருவண்ணாமலை, வத்திராயிருப்பு (விருதுநகர்), தானியமங்கலம் (மதுரை), பெரியகுளம் (தேனி), மீமிசல் (புதுக்கோட்டை), வைகை அணை (தேனி), மஞ்சளாறு (தஞ்சாவூர்), திருச்சி விமான நிலையம், புடலூர் (தஞ்சாவூர்), கோடியக்கரை (நாகப்பட்டினம்), விழுப்புரம், முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), அமராவதி அணை (திருப்பூர்), கடவனூர் (கள்ளக்குறிச்சி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), தேக்கடி (தேனி), மைலம்பட்டி (கரூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை.