காரைக்கால் பாரதியார் வீதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு கடந்த 25-ந் தேதி அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர், வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை இரும்பு பைப்பால் அடித்து நொறுக்கி அதிலிருந்து பணத்தை திருட முயற்சித்தார். இயந்திரத்தை முழுமையாக உடைத்து பணம் எடுக்க முடியாததால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர், அங்கிருந்த சிசிடிவி மற்றும் மின் சாதனங்களை இரும்பு பைப்பால் அடித்து உடைத்துவிட்டு தப்பிவிட்டார். இதுதொடர்பாக வங்கி மேலாளர் ஸ்ரீதர் காரைக்கால் நகர காவல்  நிலையத்தில் புகார் அளித்தார்.


புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் ஏ.டி.எம். இயந்திரம் அருகே, மது போதையில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த ஒருவரை, ஆய்வாளர் லெனின் பாரதி, உதவி காவல் ஆய்வாளர் மோகன் மற்றும் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்பதும், ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்ததையும் ஒப்புக்கொண்டார். மேலும் தான் வேலையில்லாமல் சுற்றி வருவதாகவும், சகோதரி திருமணத்திற்கு பணம் இல்லாமல், மது அருந்திவிட்டு யோசித்த பொழுது, போதையில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார். அதன் பெயரில் போலீசார் விக்னேஷை கைது செய்து சிறையில அடைத்தனர்.




உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?


என்ன செய்ய வேண்டும்?


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.