இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:


 ”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை  பெய்யக்கூடும்.  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.


நாளை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 


31.01.2024 முதல் 02.02.2024 வரை: தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.   ஏனைய பகுதிகளில்  வறண்ட வானிலை நிலவக்கூடும்.


03.02.2024: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.   


உறைபனி எச்சரிக்கை:


28.01.2024 மற்றும் 29.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.  கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  ஏதுமில்லை.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை”.


இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க 


Nitish Kumar: உடைந்தது I.N.D.I.A. கூட்டணி..! ராஜினாமா ஏன்? - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பரபரப்பு விளக்கம்


Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தல் - தமிழ்நாட்டை குறிவைக்கும் பாஜக, பொறுப்பாளர்கள் நியமனம்


Pondicherry T10 League 2024: இன்று முதல் பாண்டிச்சேரி டி10 லீக்.. பட்டையகிளப்ப காத்திருக்கும் 6 அணிகள்..!