சென்னையில் சற்று குறைந்த மழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை முதல் கடலூர் வரை இன்று இரவு முதல் நாளை காலை வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.


 “இன்று இரவு சென்னையில் இருந்து கடலூர் பகுதி வரை ஒருங்கிணைப்பு காணப்படுகிறது. எனவே சென்னை முதல் கடலூர் வரை இரவு முதல் திங்கள் காலை வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், காலை 8.30 மணிக்குப் பிறகு இதுதொடர்பாக விரிவான தகவல் மற்று மழை தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.


 






தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வந்த மழை, கடந்த ஓரிரு தினங்களாக தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டிவருகிறது.


இதனால், மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 9-ந் தேதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதற்கிடையே, விடிய விடிய பெய்துகொண்டிருக்கும் மழையால் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட புரசைவாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னைக்கு வருபவர்கள் தங்களது பயணத்தை 2, 3 நாள்கள் ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.


முன்னதாக, செம்பரம்பாக்கத்திலிருந்து 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்ட சுழலில் தற்போது அந்த அணையிலிருந்து 2000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.


புழல் ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 1500 கன அடியாக இருந்த சுழலில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக 2000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.


 






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண